/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சிறுவன் உள்ளிட்ட இருவரை கடித்து குதறிய தெரு நாய் சிறுவன் உள்ளிட்ட இருவரை கடித்து குதறிய தெரு நாய்
சிறுவன் உள்ளிட்ட இருவரை கடித்து குதறிய தெரு நாய்
சிறுவன் உள்ளிட்ட இருவரை கடித்து குதறிய தெரு நாய்
சிறுவன் உள்ளிட்ட இருவரை கடித்து குதறிய தெரு நாய்
ADDED : ஜூலை 08, 2024 05:35 AM

சென்னை: தண்டையார்பேட்டை, சேனியம்மன் நகர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 42; சமையல் தொழிலாளி.
இவரது மகன் கவுரிநாத், 8, அதே பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன், நேற்று முன்தினம் தன் வீட்டருகே நடந்து சென்றான்.
அப்போது அங்கு, வாயில் தண்ணீர் வடிந்த நிலையில் இருந்த, நோய் தாக்கப்பட்ட நாய் ஒன்று, திடீரென கவுரிநாத் மீது பாய்ந்து, இடது கையில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சிறுவன் துடித்தான்.
இதைப் பார்த்த அங்கிருந்தோர், நாயிடம்இருந்து சிறுவனை மீட்டு, அருகிலுள்ள தண்டையார்பேட்டை புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், நாய்க்கடிக்கு மருந்து இல்லாததால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான்.
இதுகுறித்து கவுரிநாத்தின் தாய் தனலட்சுமி கூறியதாவது:
எங்கள் வீட்டருகே உள்ளவர்கள், தெருவிலுள்ள நாய்களை வீட்டில் எடுத்து வளர்க்கின்றனர். என் மகனை கடித்த நாய், இதுவரை பலரை கடித்துள்ளது.
நோய் பாதித்துள்ள இதுபோன்ற நாய்களால் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறோம். தெருவில் நடமாடவே பயமாக உள்ளது. நோய் பாதித்த இந்த நாயை, மாநகராட்சி அதிகாரிகள் பிடித்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில், அவ்வழியாக வந்த கட்டட தொழிலாளி ஒருவரையும் அதே நாய் கடித்துள்ளது.
பலரை தொடர்ந்து கடித்து வரும் இந்த நாயை, மாநகராட்சி அதிகாரிகள் பிடித்துச் செல்ல வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.