/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பால பில்லருக்கு துளை போடும் பணி ராட்சத இயந்திரம் வரவழைப்பு பால பில்லருக்கு துளை போடும் பணி ராட்சத இயந்திரம் வரவழைப்பு
பால பில்லருக்கு துளை போடும் பணி ராட்சத இயந்திரம் வரவழைப்பு
பால பில்லருக்கு துளை போடும் பணி ராட்சத இயந்திரம் வரவழைப்பு
பால பில்லருக்கு துளை போடும் பணி ராட்சத இயந்திரம் வரவழைப்பு
ADDED : ஜூன் 25, 2024 05:38 AM

காஞ்சிபுரம், : சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை போடும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, பிரதான கிராமப்புற கடவுப்பாதைகளில், உயர் மட்ட பாலம் மற்றும் ஏரி நடுவே உயர்மட்ட கட்டும் பணி நிறைவு பெற்று உள்ளது.
இரண்டாவது கட்டமாக, சாலை போடும் பணிக்கு, ஆளுயரத்திற்கு மண்ணை கொட்டி நிரப்பும் பணி செய்து வருகின்றனர். இதில், காஞ்சிபுரம் - அரக்கோணம் மின்சார ரயில் கடவுப்பாதை மற்றும் காஞ்சிபுரம் - அரக்கோணம் நான்குவழிச்சாலை கடவுப்பாதைக்கு உயர்மட்ட பாலப்பணி நடந்து வருகிறது.
இந்த பணிக்கு, ராட்சத பில்லர்கள் அமைப்பதற்கு, துளையிடும் இயந்திரத்தில் ஒரு பகுதி துளை போட்டு பில்லர் அமைக்கப்பட்டு உள்ளது. மற்றொரு புறம், பில்லர்கள் அமைக்க முடியவில்லை. நிலத்தடியில், பாறை குறுக்கிடுவதால், பில்லர் அமைக்கும் பணி மூன்று மாதமாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
நேற்று, ராட்சத துளையிடும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இனிமேல் தான், துளைபோட்டு பில்லர் அமைக்கப்படும் என, அதிவிரைவு சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.