/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 26 ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு 26 ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
26 ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
26 ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
26 ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூலை 06, 2024 10:04 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஒரு ஆங்கிலம், இரண்டு சமூக அறிவியல் ஆகிய பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும், 23 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக அறிவிப்பு பலகையில் காலி பணி இட விபரங்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
பள்ளி மேலாண்மைக் குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நியமிக்கப்பட உள்ளன.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15,000 ரூபாய் மற்றும், 12,000 ரூபாய் இடை நிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளன.
ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தில், வெற்றி பெற்றவர் நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.