/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சிபுரத்தில் வரும் 21ல் வேலை வாய்ப்பு முகாம் காஞ்சிபுரத்தில் வரும் 21ல் வேலை வாய்ப்பு முகாம்
காஞ்சிபுரத்தில் வரும் 21ல் வேலை வாய்ப்பு முகாம்
காஞ்சிபுரத்தில் வரும் 21ல் வேலை வாய்ப்பு முகாம்
காஞ்சிபுரத்தில் வரும் 21ல் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஜூன் 18, 2024 10:30 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், நாளை மறுதினம், தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
காஞ்சிபுரம் கலெக்டர்அலுவலக வளாகத்தில் இருக்கும், காஞ்சிபுரம்மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்,நாளை மறுதினம், காலை 10:00 மணி அளவில் நடக்கும் முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகள் நேர்கானல் நடத்த உள்ளனர்.
இதில், 18 - 35 வயது வரை இருக்கும், பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் தங்களின் அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் போட்டோவுடன் பங்கு பெறலாம்.
கூடுதல் விபரங்களுக்கு, 044 -27237124 என்ற தொலைபேசி எண்ணில், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்களை தொடர்புக் கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.