/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கல்வி கனவை நனவாக்கும் வித்யா மந்திர் பள்ளி கல்வி கனவை நனவாக்கும் வித்யா மந்திர் பள்ளி
கல்வி கனவை நனவாக்கும் வித்யா மந்திர் பள்ளி
கல்வி கனவை நனவாக்கும் வித்யா மந்திர் பள்ளி
கல்வி கனவை நனவாக்கும் வித்யா மந்திர் பள்ளி
ADDED : மே 24, 2025 11:55 PM
பெற்றோரின் கல்விக்கனவை நனவாக்கும் திருக்கோவிலுார் வித்யா மந்திர் பள்ளி, சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில பாடத்திட்டங்களில் தொடர்ந்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது என தாளாளர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
திருக்கோவிலுார் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி கடந்த, 1978ம் ஆண்டு துவங்கப்பட்டு, பல்லாயிரம் மாணவர்களின் வாழ்வில் ஒளி விளக்கை ஏற்றி வைத்து தீபமாக சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது.
ஒழுக்கம், நேர்மை, உழைப்பு என்ற குறிக்கோளுடன், மாணவர்களின் எதிர்காலத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு சேர்க்கும் உன்னத மையமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது.
கிராமப்புற மாணவர்களின் கல்விக்கனவை நனவாக்கும் வகையில் பஸ் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
கணினி, நவீன ஆய்வுக்கூடங்கள், விரிவடைந்த நுாலகம், விஸ்தாரமான விளையாட்டு மைதானம் என இயற்கை சூழலில் பள்ளி வளாகம் அமைந்துள்ளது.
திறமையான அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் மாணவர்களின் மனநிலையை அறிந்து கல்வி போதிக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களையும் சமமாக கருதி ஏற்றத்தாழ்வுகள் இன்றி கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து ஆகியவற்றுடன், பாரம்பரிய கலைகளும், திறமையான கலைஞர்களை கொண்டு கற்றுக்கொடுக்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேர, கூடுதல் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தாண்டு சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை பெற்றுள்ளனர்.
மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி சிறந்த கல்வியை போதித்து வருவதற்கு இதுவே சான்று.
இந்த வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், நிர்வாகத்திற்கு கல்வி அறக்கட்டளை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு சுனில்குமார் கூறினார்.