/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
ADDED : செப் 12, 2025 11:39 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் இலக்கியமன்ற துவக்க விழா, முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா, ஆசிரியர் தின விழா என முப்பெரும் விழா நடந்தது.
மாணவி பத்மாவதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தர்மராஜா தலைமை தாங்கினார். சின்னசேலம் தமிழ்சங்க தலைவர் கவிதைத்தம்பி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழின் பெருமைகள் குறித்து பேசினார். தொடர்ந்து தமிழ்த்துறைத் தலைவர் மோட்ச ஆனந்தன், உதவி பேராசிரியர் விஜயகுமார் ஆகியோர் தமிழ்த்துறையில் பயிலும் மாணவர்களைப் பாராட்டி, பருவத்தேர்வில் முதல் மற்றும் 2ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
நிகழ்ச்சியை கவுரவ விரிவுரையாளர்கள் நாகராஜன், ஆனந்தகுமார், ஆனந்தி, கற்பனைச் செல்வன், இன்பகனி, வீரப்பன், ராஜ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியை மாணவர்கள் கேத்ரின், விக்னேஷ் தொகுத்து வழங்கினர். விழாவில் கல்லுாரி துறை தலைவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர் சுகுமார் நன்றி கூறினார்.