/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மலைவாழ் மக்களுக்கான திட்டங்கள் கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம் மலைவாழ் மக்களுக்கான திட்டங்கள் கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
மலைவாழ் மக்களுக்கான திட்டங்கள் கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
மலைவாழ் மக்களுக்கான திட்டங்கள் கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
மலைவாழ் மக்களுக்கான திட்டங்கள் கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
ADDED : செப் 12, 2025 11:36 PM

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலையில் மலைவாழ் மக்களுக்கு மேற்கொள்ளப்படும் சிறப்பு திட்டங்களை முறையாக செயல்படுத்திட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ் கல்வராயன்மலையில் மலைவாழ் மக்கள், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, பொருளாதார மேம்பாடு அடைவதற்கு, அனைத்து அரசு துறைகளை ஒருங்கிணைத்து சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கல்வராயன்மலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கல்வராயன்மலை பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுப்பதற்கு போலீஸ் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மலைவாழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆவின் மூலம் பால் கொள்முதல் நிலையங்களை அதிகரித்தல், நபார்டு திட்டத்தின் கீழ் சாலை பணிகள் மேம்படுத்துதல், வருவாய் துறை சார்பில் வன உரிமைச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் நடக்கும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு அரசின் வளர்ச்சி திட்டங்களை முறையாக செயல்படுத்திட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், கலால் உதவி ஆணையர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.