ADDED : ஜன 04, 2024 06:14 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் சூதாடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த வடமலையனுார் பச்சையம்மன் மாட்டு கொட்டகையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் மதன் மோகன் மற்றும் போலீசார் நேற்று மதியம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பணம் வைத்து சூதாடிய அதே ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 53; அழகேசன், 62; ஆறுமுகம், 52; ஆகியோரை பிடித்து, சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.