/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தேகளீச பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை தேகளீச பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை
தேகளீச பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை
தேகளீச பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை
தேகளீச பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை
ADDED : செப் 21, 2025 05:00 AM

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு திருப்பாவாடை தளிகை சிறப்பு வழிபாடு நடந்தது.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜை, 7:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறை மண்டபத்தில் எழுந்தருளினார்.
காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 11:00 மணிக்கு சிகப்பு கல்கி கிரீடம், மரகத கண்டி, மரகத பச்சை பதக்கம், அட்டிகை அணிந்து திருக்கல்யாண வைபவம் நடந்தது.
மதியம் 1:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க திருப்பாவாடை தளிகையுடன் தீபாராதனை நடந்தது.
மூலவர் உலகளந்த பெருமாள் கல்பதித்த சங்கு சக்கரம், கர்ண பத்திரம், காசு மாலை, மாங்காய் மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மாலை 6:00 மணிக்கு பெருமாள் சன்னதி வீதி புறப்பாடு, கண்ணாடி அறையில் ஊஞ்சல் சேவை, இரவு 9:00 மணிக்கு சுவாமி மூலஸ்தானம் எழுந்தள்ளினார்.
ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகளன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில், வெகு நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.