ADDED : செப் 21, 2025 05:00 AM
ரிஷிவந்தியம்:ரிஷிவந்தியத்தில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் குட்கா விற்ற ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த பாலசந்தர் மகன் மணிராஜ், 28; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, 20 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.