/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுார் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருக்கோவிலுார் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருக்கோவிலுார் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருக்கோவிலுார் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருக்கோவிலுார் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 16, 2025 07:30 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகர, ஒன்றிய அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
திருக்கோவிலுார் சந்தப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, நகர செயலாளர் சுப்பு வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் பழனி, சேகர், சந்தோஷ் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி, பூத் கமிட்டி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, தொழிலதிபர் பிரபுசிவராஜ், முன்னாள் நகர செயலாளர் இளவரசன், நகர மன்ற உறுப்பினர்கள் சம்பத், வினோத், பிறைமதி ஏழுமலை, பஷிரா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.