/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அண்ணாதுரை பிறந்த நாள் தி.மு.க.,வினர் மாலை அணிவிப்பு அண்ணாதுரை பிறந்த நாள் தி.மு.க.,வினர் மாலை அணிவிப்பு
அண்ணாதுரை பிறந்த நாள் தி.மு.க.,வினர் மாலை அணிவிப்பு
அண்ணாதுரை பிறந்த நாள் தி.மு.க.,வினர் மாலை அணிவிப்பு
அண்ணாதுரை பிறந்த நாள் தி.மு.க.,வினர் மாலை அணிவிப்பு
ADDED : செப் 16, 2025 07:31 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் தி.மு.க., வினர் ஊர்வலமாக சென்று அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு திருக்கோவிலுார் நகர, ஒன்றிய தி.மு.க., சார்பில் ஐந்து முனை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நான்கு முனை சந்திப்பில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு வந்தனர். பொன்முடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நகராட்சி சேர்மன் முருகன், ஒன்றிய செயலாளர் தங்கம், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், அவைத்தலைவர் குணா, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.