/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சியில் முப்பெரும் விழாகள்ளக்குறிச்சியில் முப்பெரும் விழா
கள்ளக்குறிச்சியில் முப்பெரும் விழா
கள்ளக்குறிச்சியில் முப்பெரும் விழா
கள்ளக்குறிச்சியில் முப்பெரும் விழா
ADDED : ஜன 02, 2024 11:43 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் திருக்குறள் நடுவம், தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி டேனிஷ் மிஷன் துவக்க பள்ளியில் நடந்த விழாவிற்கு, திருக்குறள் நடுவம் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் கிருஷ்ணசாமி, தலைமை ஆசிரியர் சத்திய சாலமன், கவி கம்பன் கழக தலைவர் நல்லாப்பிள்ளை, சின்னசேலம் திருக்குறள் பேரவை தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.
திருக்குறள் பேரவை தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்றார். தொடர்ந்து கவிஞர்கள் முத்தமிழ்முத்தன், செல்லமுத்து, ஜெயம்ரவி, தனலட்சுமி மனோகரன், ஜெயராமன், ராமலிங்கம், செல்வராஜ், குப்பன், ராமகிருஷ்ணன், விஜயன், மோகன், மாரியம்மாள் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நேரு மகாகவி பாரதி விருதுகளை அரசு பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை கீதா, ஆசிரியர் நிதானம், திருக்குறள் தொண்டு நிறுவனம் குப்பன், தமிழ் படைப்பாளர் சங்கத் தலைவர் இளையாப்பிள்ளை, முத்தமி கலை இலக்கிய பேரவைத் தலைவர் பாரதிகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு வழங்கினார்.புலவர்கள் ராஜகோபால், கோவிந்தராஜி, பெரியாழ்வார் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
துரைமுருகன் நன்றி கூறினார்.