நீட் தேர்வு விவகாரம்: லோக்சபாவில் ஒத்திவைப்பு: ராஜ்யசபாவில் அமளி
நீட் தேர்வு விவகாரம்: லோக்சபாவில் ஒத்திவைப்பு: ராஜ்யசபாவில் அமளி
நீட் தேர்வு விவகாரம்: லோக்சபாவில் ஒத்திவைப்பு: ராஜ்யசபாவில் அமளி

முடிவு
நீட் தேர்வு விவகாரத்தை லோக்சபாவில் எழுப்புவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வீட்டில் நேற்று( ஜூன் 27) ‛ இண்டியா' கூட்டணி கட்சியினர் ஆலோசனை நடத்தினர். அதில், இரு அவைகளிலும் நீட் தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து விவாதம் கோரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி , இன்று பார்லி., இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கான கோரிக்கை கொடுக்கப்பட்டது.
லோக்சபா
லோக்சபாவில், நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
ராஜ்யசபா
ராஜ்யசபாவில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை பா.ஜ., எம்.பி., துவங்க இருந்தார். நீட் முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கார்கே வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர். இது ஏற்கப்படாததால், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு அவை கூடியதும், மீண்டும் அமளி ஏற்பட்டது. அதேநேரத்தில் அவை தொடர்ந்து நடந்தது.
மயக்கம்
எதிர்க்கட்சிகள் அமளியின் போது காங்., எம்.பி., பூலோ தேவி மயக்கமடைந்தார். பார்லி., வளாகத்தில் டாக்டர்கள் முதலுதவி அளித்தனர். பிறகு மருத்துவமனையில் அனுமதித்தனர். மத்திய அரசை கண்டித்து பிஜூ ஜனதா தள எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.