ADDED : ஜூன் 14, 2025 01:07 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்துறையில் தாசில்தாரை ஒருவரை பணியிட மாற்றம் செய்தும், துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்கியும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணிபுரிந்த ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்த சேகர், தாசில்தாராக பதவி உயர்வு பெற்று வாணாபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.