/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சாரதா வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழாசாரதா வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா
சாரதா வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா
சாரதா வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா
சாரதா வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 11, 2024 03:26 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஸ்ரீ சாரதா வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தாளாளர் பிரபு வரவேற்றார். பள்ளி முதல்வர் கீதா ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிர்வாகிகள் கார்த்திகேயன், பிரபு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.