ADDED : மார் 19, 2025 06:28 AM

கள்ளக்குறிச்சி, : அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தினர் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது.