/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ரேஷன் கடைகளில் இம்மாத இறுதிக்குள் கை ரேகை பதிவு ரேஷன் கடைகளில் இம்மாத இறுதிக்குள் கை ரேகை பதிவு
ரேஷன் கடைகளில் இம்மாத இறுதிக்குள் கை ரேகை பதிவு
ரேஷன் கடைகளில் இம்மாத இறுதிக்குள் கை ரேகை பதிவு
ரேஷன் கடைகளில் இம்மாத இறுதிக்குள் கை ரேகை பதிவு
ADDED : மார் 19, 2025 05:46 AM
கள்ளக்குறிச்சி: குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வரும், 31 ம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்ய கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தி உள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பயனாளிகளுக்கு சென்றடைவது உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பி.எச்.எச் மற்றும் ஏ.ஏ.ஒய் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களின் விபரங்களை உறுதி செய்யும் நோக்கில், கைவிரல் ரேகையை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுவரை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள், உறுப்பினர்களுடன் உடனடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் மாவட்டம், மாநிலத்திற்கு வெளியே பிற மாநிலங்களில் பணிபுரிபவர்கள், தற்காலிகமாக தற்போது வசிக்கும் இடங்களில் அருகில் உள்ள ரேஷன் கடைகளில், ஐ.எம்.பி.டி.எஸ்.இ-கேஒய்சி மூலம் தங்களது கைரேகை பதிவினை வரும், 31 ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.