/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை: 6 பேர் மீது வழக்குபோலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை: 6 பேர் மீது வழக்கு
போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை: 6 பேர் மீது வழக்கு
போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை: 6 பேர் மீது வழக்கு
போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை: 6 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 12, 2024 06:50 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்ற 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் இருசன். இவரது மகன் ஆசைதம்பி. இருவரும் தங்களுக்கு சொந்தமான சொத்தை, 1980ம் ஆண்டு விற்பனை செய்துள்ளனர்.
பின்னர், அதே சொத்திற்கு, ஆசைதம்பி கடந்த 2022 ம் ஆண்டு போலியாக ஆவணம் தயார் செய்து, விற்கப்பட்ட நிலத்தை தனது மகன்கள் மணிகண்டன், தினகரன் ஆகியோருக்கு தான பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.
இது, ஏற்கனவே நிலத்தை வாங்கிய கொசப்பாடி காட்டு கொட்டாயை சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் செய்தார். பின்னர் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி சங்கராபுரம் போலீசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போலி ஆவணம் தயார் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட ஆசைதம்பி, இவரது மகன்கள் மணிகண்டன், தினகரன் மற்றும் சங்கராபுரம் அப்போதைய சார்பதிவாளர்(பொ) குணசேகரன், கணிணி தட்டச்சர் வனிதா, முனியன் மகன் கொளஞ்சி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதில் சார்பதிவாளர் குணசேகரன் தற்போது பணி ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடதக்கது.