/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.9.25 லட்சம் வர்த்தகம் கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.9.25 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.9.25 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.9.25 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.9.25 லட்சம் வர்த்தகம்
ADDED : செப் 16, 2025 06:39 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் நேற்று 9.25 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று மக்காச்சோளம் 230 மூட்டை, நிலக்கடலை 25, உளுந்து 24, கம்பு 10, எள் 5 மூட்டை என 294 மூட்டை விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,165 ரூபாய்க்கும், நிலக்கடலை 7,815, உளுந்து 4,515, கம்பு 3,052, எள் 6,077 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக நேற்று ஒரு நாள் மட்டும், 9 லட்சத்து 25 ஆயிரத்து 243க்கு வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 10 மூட்டை கொண்டுவரப்பட்டது. இதில், சராசரியாக மக்காச்சோளம் 2,140 ரூபாய் என 21,400 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம் கமிட்டியில் நெல் 196 மூட்டை, மக்காச்சோளம் 37, கம்பு 16, எள், உளுந்து தலா ஒரு மூட்டை என மொத்தம் 251 மூட்டை விளை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். சராசரியாக நெல் 2,050 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,350, கம்பு 3,150, எள் 8,500, உளுந்து 7,200 ரூபாய்க்கு என மொத்தம் 4 லட்சத்து 91 ஆயிரத்து 516 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.