/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நான்கு முனை சந்திப்பில் 'ரவுண்டானா': வாகன ஓட்டிகள் கோரிக்கை நான்கு முனை சந்திப்பில் 'ரவுண்டானா': வாகன ஓட்டிகள் கோரிக்கை
நான்கு முனை சந்திப்பில் 'ரவுண்டானா': வாகன ஓட்டிகள் கோரிக்கை
நான்கு முனை சந்திப்பில் 'ரவுண்டானா': வாகன ஓட்டிகள் கோரிக்கை
நான்கு முனை சந்திப்பில் 'ரவுண்டானா': வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : மே 31, 2025 12:25 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் சாலைகளை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி வாகன போக்குவரத்து அதிகமுள்ள பகுதியாக உள்ளது. விழுப்புரம், சென்னை, சேலம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கள்ளக்குறிச்சி நகரை கடந்து செல்கின்றன.
நான்கு முனை சந்திப்பையொட்டி, பஸ் நிலையம் இருப்பதால் அதன் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழிகளிலும், சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சாலையோரம் நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது அவ்வப்போது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், தொடர் கண்காணிப்பு இல்லாததால், மீண்டும் பழைய நிலைக்கு சாலை மாறி விடுகிறது.
நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்பட்டு, வாகனங்களை அனுப்பி வைக்கின்றனர்.
அங்கு தியாகதுருகம்- சேலம் சாலை, காந்தி சாலை - கச்சேரி சாலை, கச்சேரி சாலை - தியாகதுருகம் சாலை மார்க்கங்களில் சிக்னலில் நிற்காமல் வாகன ஓட்டிகள் செல்வதற்கான 'பிரீ லெப்ட்' சாலைகள் இல்லாததால்,
வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாகவும் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நான்கு முனை சந்திப்பில் சாலைகள் அகலப்படுத்தி, இடதுபக்க சாலையுடன் கூடிய ரவுண்டானாஅமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான், வாகன நெரிசலுக்கு தீர்வு காணப்படும்,' என்றனர்.