/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆதிச்சனுார் அகழாய்வை பணியை பெண்ணையாறு வரை நீட்டிக்க கோரிக்கை ஆதிச்சனுார் அகழாய்வை பணியை பெண்ணையாறு வரை நீட்டிக்க கோரிக்கை
ஆதிச்சனுார் அகழாய்வை பணியை பெண்ணையாறு வரை நீட்டிக்க கோரிக்கை
ஆதிச்சனுார் அகழாய்வை பணியை பெண்ணையாறு வரை நீட்டிக்க கோரிக்கை
ஆதிச்சனுார் அகழாய்வை பணியை பெண்ணையாறு வரை நீட்டிக்க கோரிக்கை
ADDED : மார் 21, 2025 06:48 AM

திருக்கோவிலுார்: ஆதிச்சனுார் அகழாய்வை துரிஞ்சலாற்றின் கரையோரத்தை தொடர்ந்து, தென்பெண்ணையாற்று பகுதி வரை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலுார் கபிலர் தொன்மை ஆய்வு மைய தலைவர் உதியன் கூறியதாவது.:
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் சந்திக்கும் பகுதியாக ஆதிச்சனுார், தேவனுார், நாயனுார், வீரபாண்டி பகுதிகள் உள்ளது.
கபிலர் தொன்மை ஆய்வு மையம் சார்பில் விழுப்புரம் வீரராகவன், நுாலகர் அன்பழகன், வரலாற்று பேராசிரியர் ஸ்தனிஸ்லாஸ், நல்லதம்பி உள்ளிட்ட குழுவினர் மூலம் இப்பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆதிச்சனுாரில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்பதுக்கை கடந்த 2018ம் ஆண்டு இக்குழுவினரால் கண்டறியப்பட்டு, தொல்லியல் காப்பாட்சியர் ரஷீத்கான் ஏற்பாட்டில் இங்கு இருக்கும் கல்பதுக்கை, கல்திட்டை, கல்வட்டம், ஈமப்பேழை, கற்குவை, முதுமக்கள்தாழி போன்றவற்றை அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறை சார்பில் அரசுக்கு முன்மொழியப்பட்டிருந்தது.
அதன்படி தமிழக அரசு நிதிநிலை அறிக்கையின் போது, ஆதிச்சனுாரில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
இதே போல் வீரபாண்டி, புலிக்கல் பகுதியில் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய உருக்கு உலைக்கலன், அந்திலியில் முதுமக்கள் தாழி கிடைத்துள்ளது. எனவே, துரிஞ்சலாறு, அதன் இணைப்பு பகுதியான தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதி வரை பரவலாக அகழாய்வு செய்ய வேண்டும்.
இதன் மூலம் பல பழங்கால அரிய பொக்கிஷங்கள் கிடைக்கப்பெற்று அரிய தகவல்கள் உலகிற்கு கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் தமிழக அரசின் ஆதிச்சனுார் அகழாய்வு பணியை தென்பெண்ணை ஆறு வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு உதியன் கூறினார்.