/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மணிமுக்தா அணையில் பழுதான 3 ஷெட்டர்கள் புதுப்பிப்பு! ரூ.20.76 கோடியில் விரைவில் பணி துவக்கம்மணிமுக்தா அணையில் பழுதான 3 ஷெட்டர்கள் புதுப்பிப்பு! ரூ.20.76 கோடியில் விரைவில் பணி துவக்கம்
மணிமுக்தா அணையில் பழுதான 3 ஷெட்டர்கள் புதுப்பிப்பு! ரூ.20.76 கோடியில் விரைவில் பணி துவக்கம்
மணிமுக்தா அணையில் பழுதான 3 ஷெட்டர்கள் புதுப்பிப்பு! ரூ.20.76 கோடியில் விரைவில் பணி துவக்கம்
மணிமுக்தா அணையில் பழுதான 3 ஷெட்டர்கள் புதுப்பிப்பு! ரூ.20.76 கோடியில் விரைவில் பணி துவக்கம்
UPDATED : செப் 11, 2025 11:05 PM
ADDED : செப் 11, 2025 11:03 PM

கள்ளக்குறிச்சி; சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் பழுதான பழைய 3 ஷெட்டர்களை புதுப்பிக்க 20.76 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சில தினங்களில் பணிகளை துவங்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம், 736.96 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலையில் பெய்யும் மழை நீர் மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக அணைக்கு வருகிறது. இதுதவிர, மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையும் அணைக்கு நீர்வரத்தாக உள்ளது.
மழைக்காலத்தில் அணையில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு, விவசாயத்திற்காக பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் புதிய மற்றும் பழைய பாசனத்தைச் சேர்ந்த 5,493 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் நேரடியாக பயன்பெறும்.
அதிகளவு மழை பெய்யும் பட்சத்தில் 3 பழைய ெஷட்டர்கள் மற்றும் 4 புதிய ெஷட்டர் வழியாக மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். இதனால் ஆற்றில் உள்ள அணைக்கட்டுகள் நிரம்புவதுடன், அருகாமையில் உள்ள ஏரிகளுக்கும் தண்ணீர் செல்லும். விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக மணிமுக்தா அணை உள்ளது.
இந்நிலையில் கடந்த 1970ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள 3 பழைய ெஷட்டர்களும் மிகுந்த சேதமடைந்து வலுவிழந்து காணப்படுகிறது. இதனால், அணையில் 30 அடி உயரத்திற்கு மேலாக தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதே நிலை தொடர்ந்தால் பழைய ஷெட்டர்கள் எப்போது வேண்டுமானாலும் உடையலாம் எனவும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் பழைய ெஷட்டர்களை சீரமைக்க வலியுறுத்தியும் கடந்த சில மாதங்களுக்கு முன் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த கலெக்டர் பிரசாந்த், அணையில் உள்ள பழைய ெஷட்டர்களை புனரமைக்கவும், பாசன வாய்க்கால் மதகு புதுப்பிக்கவும் 20.76 கோடி நிதி கேட்டு நீர்வளத்துறை உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, ெஷட்டர்களை புதுப்பிக்கும் பணிக்காக 2025 - 2026ம் நிதி ஆண்டில் 20.76 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இதற்கான அரசாணை நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, சீரமைப்புக்கு ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்த கலெக்டர் பிரசாந்த் கூறுகையில், 'அணையில் உள்ள தண்ணீர் பழைய ெஷட்டர்கள் வழியாக தற்போது வெளியேற்றப்பட்டு பல்லகச்சேரி ஏரியில் தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றும் சில தினங்களில் பழைய ெஷட்டர்கள் புதுப்பிக்கும் பணிகள் துவங்க உள்ளது. இதனால், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மணிமுக்தா அணையில் தண்ணீர் தேக்கி வைக்க இயலாத சூழல் உள்ளது. புதுப்பிக்கும் பணிகள் முழுமையாக முடிந்ததும் அடுத்தாண்டு அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும்' என்றார்.