/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ADDED : ஜூன் 28, 2025 12:47 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கினார்.
நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும், மாணவர்களின் மதிப்பெண்களை அதிகரிக்கும் பொருட்டும் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, கடந்த கல்வியாண்டில் அதிகளவு தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளியின் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கருத்தாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். பயிற்சியில் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் கற்பிக்க வேண்டும்; என சி.இ.ஓ., கார்த்திகா அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், நேர்முக உதவியாளர்கள் தண்டபாணி, செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.