/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ரேஷன் கடை விற்பனையாளர்கள் கள்ளக்குறிச்சியில் ஆய்வு கூட்டம் ரேஷன் கடை விற்பனையாளர்கள் கள்ளக்குறிச்சியில் ஆய்வு கூட்டம்
ரேஷன் கடை விற்பனையாளர்கள் கள்ளக்குறிச்சியில் ஆய்வு கூட்டம்
ரேஷன் கடை விற்பனையாளர்கள் கள்ளக்குறிச்சியில் ஆய்வு கூட்டம்
ரேஷன் கடை விற்பனையாளர்கள் கள்ளக்குறிச்சியில் ஆய்வு கூட்டம்
ADDED : ஜூன் 15, 2025 10:36 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.
பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ரேஷன் கார்டில் உள்ள அனைவரது கை விரல் ரேகைகளும் இயந்திரத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி சரகத்தில் 85 சதவீத பேரின் விரல் ரேகை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. காலதாமதமின்றி அனைவரது விரல் ரேகைகளும் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் சக்திவேல், செல்வராசு, மணிகண்டன் மற்றும் 6 ஒன்றியங்களைச் சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.
அதேபோல், உளுந்துார்பேட்டையில் துணை பதிவாளர் சுரேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, திருநாவலுார் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த ரேஷன்கடை விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.