ADDED : ஜூன் 15, 2025 10:36 PM
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே மா.கம்யூ., சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடந்தது.
கொசப்பாடி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், வட்டக்குழு நிர்வாகிகள் பாஸ்கர், முரளி, சக்திவேல், மாரியாப்பிள்ளை, ஜாகீராபீ, ரஞ்சிதா மற்றும் பலர் பங்கேற்றனர்.
பிரசாரத்தில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்தில் உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டிப்பது.
தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதேபோன்று, கள்ளிப்பட்டு, பழைய பாலப்பட்டு, புது பாலப்பட்டு, அரசம்பட்டு, பூட்டை, செம்பராம்பட்டு கிராமங்களிலும் பிரசார இயக்கம் நடந்தது.