Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கீழ்பாடியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா

கீழ்பாடியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா

கீழ்பாடியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா

கீழ்பாடியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா

ADDED : ஜூலை 04, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
ரிஷிவந்தியம்: கீழ்பாடி கிராமத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.

ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.

முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலமாக கட்டடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, கலெக்டர் பிரசாந்த், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் பெயர் பலகையை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வகம், பிரசவம், மருந்தகம், மருந்து கிடங்கு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. கீழ்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா, பி.டி.ஓ., துரைமுருகன், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் பெறுநற்கிள்ளி, ஒன்றிய செயலாளர் பெருமாள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வக்குமார், ஒன்றிய கவுன்சிலர் ஜீவரேகா அண்ணாமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us