/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுாரில் பெயரளவிற்கு ஆக்கிரமிப்பு அகற்றம் திருக்கோவிலுாரில் பெயரளவிற்கு ஆக்கிரமிப்பு அகற்றம்
திருக்கோவிலுாரில் பெயரளவிற்கு ஆக்கிரமிப்பு அகற்றம்
திருக்கோவிலுாரில் பெயரளவிற்கு ஆக்கிரமிப்பு அகற்றம்
திருக்கோவிலுாரில் பெயரளவிற்கு ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 04, 2025 02:40 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெயரளவிற்கு சாலையில் வைக்கப்பட்ட பேனர்கள் மட்டுமே அகற்றப்பட்டது.
திருக்கோவிலுார் நகரின் முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக நகராட்சி சார்பில் வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து வடக்கு வீதி, மேலவீதி, மார்க்கெட் தெரு, 5முனை சந்திப்பு ஆகிய இடங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகள் நேற்றும், இன்றும் அகற்றப்படும் என வருவாய்த்துறை சார்பில் தாசில்தார் ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
நேற்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன், நகராட்சி ஊழியர்கள் வருவாய் ஆய்வாளர் அருள்பிரகாசம், வி.ஏ.ஓ., வினோத் முன்னிலையில், நகராட்சி ஆணையர் திவ்யா மேற்பார்வையில் பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த போர்டு, பேனர், தள்ளுவண்டி கடைகளை மட்டுமே பெயரளவிற்கு அகற்றினர்.