Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு நேர்காணல்

பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு நேர்காணல்

பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு நேர்காணல்

பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு நேர்காணல்

ADDED : பிப் 15, 2024 10:14 PM


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், 125 மாணவர்கள் தேர்வாகினர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான நேர்காணல் நடந்தது. நிகழ்ச்சிக்கு தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார். தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லாபக்ஷ் முன்னிலை வகித்தனர். முதல்வர் கண்ணன் வரவேற்றார்.

முகாமில், சென்னை ராயல் என்பீல்டு மேலாளர்கள் சிவா, கவுதம் ஆகியோர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், இயந்திரவியல், ஆட்டோமொபைல் துறைகளில் 162 மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினர். முதல்கட்டமாக 125 பேர் தேர்வாகினர்.

கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா பேசுகையில், தேர்வான மாணவர்கள் சென்னை ராயல் என்பீல்டு நிறுவனத்தில் வரும் ஜூன் மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு, தங்கும் விடுதி வசதியுடன் பணியமர்த்தப்பட உள்ளனர்' என்றார். ஏற்பாடுகளை கல்லுாரி துறை தலைவர்கள் விஜயராஜ், முகமதுசபீக், சுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர். துணை முதல்வர் பாஸ்கர் நன்றி கூறினார்.