/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசியல் தலையீடு, உயர் அதிகாரிகள் டார்ச்சர்; நீண்டகால விடுப்பில் சென்ற போலீசார் அரசியல் தலையீடு, உயர் அதிகாரிகள் டார்ச்சர்; நீண்டகால விடுப்பில் சென்ற போலீசார்
அரசியல் தலையீடு, உயர் அதிகாரிகள் டார்ச்சர்; நீண்டகால விடுப்பில் சென்ற போலீசார்
அரசியல் தலையீடு, உயர் அதிகாரிகள் டார்ச்சர்; நீண்டகால விடுப்பில் சென்ற போலீசார்
அரசியல் தலையீடு, உயர் அதிகாரிகள் டார்ச்சர்; நீண்டகால விடுப்பில் சென்ற போலீசார்
ADDED : செப் 16, 2025 12:10 AM
க ள்ளச்சாராய இறப்பு பிரச்னைக்கு பிறகு, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பணிமாறுதல் என்றலே பல போலீசார் அலறுகின்றனர். இந்த நிலையில், சில மாதங்களாக தொடரும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இதனால் போலீஸ் உயர் அதிகாரிகள் கீழ் நிலையில் உள்ள இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதுதவிர, அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் டார்ச்சர் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி சங்கராபுர ம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர்கள் சில தினங்களுக்கு முன் நீண்ட கால விடுப்பில் சென்றனர். தற்போது ஒரே ஒரு சப் இன்ஸ்பெக்டர் சங்கராபுரம் போலீஸ் நிலைய பணிகளை கவனித்து வருகிறார்.
கட்சி பிரமுகர்களின் அரசியல் தலையீடு, உயர் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக போலீஸ் அதிகாரிகள் விடுப்பில் சென்றுள்ளதாக கள்ளக்குறிச்சியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், விடுப்பில் சென்ற போலீசார் வேறு மாவட்டத்திற்கு பணிமாறுதல் பெறுவதிற்கு முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர ஒரு டி.எஸ்.பி.யும், நீண்ட விடுப்பில் சென்றுள்ளது குறிப்பிடதக்கது.