/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முதியவரிடம் மோதிரம் 'அபேஸ்' போலீசார் விசாரணை முதியவரிடம் மோதிரம் 'அபேஸ்' போலீசார் விசாரணை
முதியவரிடம் மோதிரம் 'அபேஸ்' போலீசார் விசாரணை
முதியவரிடம் மோதிரம் 'அபேஸ்' போலீசார் விசாரணை
முதியவரிடம் மோதிரம் 'அபேஸ்' போலீசார் விசாரணை
ADDED : செப் 21, 2025 05:00 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 'கிப்ட்' தருவதாக கூறி முதியவரிடம் ஒரு சவரன் மோதிரத்தை 'அபேஸ்' செய்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த காட்டுஎடையாரைச் சேர்ந்தவர் சின்னதம்பி, 73; திருக்கோவிலுாரைச் சேர்ந்தவர் முருகன். இவர் நேற்று முன்தினம், நிலம் வாங்குவதாக சின்னதம்பியிடம் கூறியதால், ஆட்டோ மூலம் கல்சிறுநாகலுாருக்கு தனது மகன் சம்பந்தமூர்த்திக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை காண்பிக்க அழைத்துச் சென்றுள்ளார்.
நிலத்தை பார்த்து விட்டு, இருவரும் பஸ் மூலம் கள்ளக்குறிச்சிக்கு வந்தவர்கள், அப்பகுதியில் உள்ள புற்றுமாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அங்கு, சின்னதம்பி அணிந்திருந்த ஒரு சவரன் மோதிரத்தை தருமாறு முருகன் கேட்டுள்ளார். சின்னதம்பியும் மோதிரத்தை கொடுத்துள்ளார். 'கிப்ட்' தருவதாக கூறி 2 மோதிரத்தை கொடுத்து விட்டு முருகன் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது அது கவரிங் என தெரியவந்தது.
சின்னதம்பி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.