/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு மருத்துவக் கல்லுாரியில் சான்றிதழ் படிப்பு நாளை 22 முதல் 30ம் தேதி வரை நேரடி சேர்க்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் சான்றிதழ் படிப்பு நாளை 22 முதல் 30ம் தேதி வரை நேரடி சேர்க்கை
அரசு மருத்துவக் கல்லுாரியில் சான்றிதழ் படிப்பு நாளை 22 முதல் 30ம் தேதி வரை நேரடி சேர்க்கை
அரசு மருத்துவக் கல்லுாரியில் சான்றிதழ் படிப்பு நாளை 22 முதல் 30ம் தேதி வரை நேரடி சேர்க்கை
அரசு மருத்துவக் கல்லுாரியில் சான்றிதழ் படிப்பு நாளை 22 முதல் 30ம் தேதி வரை நேரடி சேர்க்கை
ADDED : செப் 21, 2025 05:01 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரியில் மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளுக்கு நாளை 22 முதல் 30ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரியில் 2025-26ம் கல்வியாண்டிற்கான ஓராண்டு சான்றிதழ் படிப்புகளான எமர்ஜன்சி டெக்னீஷியனில் பி,சி., பிரிவில் 3, எம்.பி.சி., பிரிவில் 1; டயாலிசிஸ் பி.சி., 3, பி.சி.எம்., 1; அனஸ்தீஷியா பி.சி., 2 இடங்கள்.
தியேட்டர் டெக்னீஷியன் எம்.பி.சி., 1; ஆர்தோபெடிக் (ஆண்) பி.சி., 2, எம்.பி.சி., 2, மல்டி பர்ப்பஸ் ஹாஸ்பிட்டல் ஒர்க்கர் பி.சி., 4, பி.சி.எம்., 1, எம்.பி.சி., 4, எஸ்.சி.ஏ., 1 என மொத்தம் 26 இடங்களுக்கு சேர்க்கை நடக்கிறது.
இது தொடர்பான விபரங்கள் https://www.gmckallakurichi.ac.in/ என்ற இணையதளத்திலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி அறிவிப்பு பலகையிலும் காணலாம்.
விண்ணப்பதாரர்கள் வரும் டிசம்பர் 31ம் தேதியன்று 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு, மேல்நிலைப் பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படும்.
இந்த இடங்களுக்கு நேரடி சேர்க்கை வரும் 22ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடத்தப்படும். இதற்கான வகுப்புகள் வரும் அக்டோபர் 6 அன்று துவங்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் மேல்நிலை மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், இருப்பிடம், ஜாதி, வயது, மாவட்ட மருத்துவ வாரியத்திடம் பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடவ் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், விதிகளுக்குட்பட்டு, வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.