/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சியில் போலீஸ் பைக் மாயம்கள்ளக்குறிச்சியில் போலீஸ் பைக் மாயம்
கள்ளக்குறிச்சியில் போலீஸ் பைக் மாயம்
கள்ளக்குறிச்சியில் போலீஸ் பைக் மாயம்
கள்ளக்குறிச்சியில் போலீஸ் பைக் மாயம்
ADDED : ஜன 05, 2024 10:25 PM
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் போலீசாரின் பைக் மாயமானது குறித்து வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரும்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் அன்பரசு,25; ஆயுதப்படையில் காவலராக பணிபுரிகிறார். கடந்த டிச., 31ம் தேதி கள்ளக்குறிச்சி விநாயகர் பட்டறைக்கு அருகே தனது பைக்கினை அன்பரசு நிறுத்தி விட்டு கரூருக்கு சென்றுள்ளார். அங்கு பணி முடிந்து மீண்டும் கள்ளக்குறிச்சி வந்து பார்த்த போது பைக்கை யாரோ திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.