/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தி.மு .க., நிர்வாகிகளுக்கு திட்டப் பணிகள் ஒதுக்கீடு தரமற்ற வேலைகள் நடக்கும் என மக்கள் அதிருப்தி தி.மு .க., நிர்வாகிகளுக்கு திட்டப் பணிகள் ஒதுக்கீடு தரமற்ற வேலைகள் நடக்கும் என மக்கள் அதிருப்தி
தி.மு .க., நிர்வாகிகளுக்கு திட்டப் பணிகள் ஒதுக்கீடு தரமற்ற வேலைகள் நடக்கும் என மக்கள் அதிருப்தி
தி.மு .க., நிர்வாகிகளுக்கு திட்டப் பணிகள் ஒதுக்கீடு தரமற்ற வேலைகள் நடக்கும் என மக்கள் அதிருப்தி
தி.மு .க., நிர்வாகிகளுக்கு திட்டப் பணிகள் ஒதுக்கீடு தரமற்ற வேலைகள் நடக்கும் என மக்கள் அதிருப்தி
ADDED : செப் 16, 2025 02:48 AM
ச ட் டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில் ஆளுங்கட்சியான தி.மு.க., அதற்கு தயாராகி வருகிறது. இம்முறை பண பலத்தை நம்பியே தி.மு.க., தேர்தலை சந்திக்கும் என எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்ற னர்.
இதனை உறுதிபடுத்தும் வகையில் தேர்தலுக்கான ஆயத்த பணிகளுக்கு பணத்தை வாரி இறைத்து செலவு செய்து வருகிறது. இதனால் உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர்.இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் உள்ளாட்சி அமைப்பு களில் உள்ள தி.மு.க., வினர் மற்றும் கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகளுக்கும், அரசின் திட்ட ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நிர்வாகியின் பொறுப்புக்கு ஏற்ப பணி கள் வழங்கப் படுகிறது.
இதனை நிர்வாகிகளே செய்து கொள்ளலாம் அல்லது ஒப்பந்ததாரரிடம் பணியை கொடுத்துவிட்டு கமிஷனை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கப்படுகிறது.
இதற்காக மேலிடத்திற்கு கமிஷன் எதுவும் கொடுக்க வேண்டாம் என்ற தகவலை அறிந்து உடன்பிறப்புகள் ஏகபோக உற்சாகத்தில் உள்ளனர். இதன் காரணமாக பணிகளை தரம் இன்றி செய்து அதிக கமிஷனை எடுத்துக் கொள்ளலாம் என்ற கணக்கில் சில நிர்வாகிகள் உள்ளனர்.
தற்போதைய ஆட்சியில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல திட்டப்பணிகள் தரம் இன்றி உள்ளது என ஏற்கனவே பொதுமக்கள் ஆதங்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஆட்சியின் இறுதி ஆண்டில் நிர்வாகிகளுக்கு அதிக கமிஷனோடு பணிகள் ஒதுக்கப்பட்டு வருவதால் தரமற்ற பணிகள் மேற்கொள்வதற்கு காரணமாகிவிடும் என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். பல இடங்களில் எதிர்க்கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அரசு பணிகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவது அவர்களுக்குள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
தி.மு.க., நிர்வாகிகளை குஷிப்படுத்தும் வகையில் அரசு ஒப்பந்தப் பணிகளை அதிக கமிஷன் எடுத்துக் கொள்ளும்படி வாரி வழங்கி ஆளும் கட்சி தாராளம் காட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.