/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பைக்குகள் மோதல் ஒருவர் பலி: இருவர் காயம் பைக்குகள் மோதல் ஒருவர் பலி: இருவர் காயம்
பைக்குகள் மோதல் ஒருவர் பலி: இருவர் காயம்
பைக்குகள் மோதல் ஒருவர் பலி: இருவர் காயம்
பைக்குகள் மோதல் ஒருவர் பலி: இருவர் காயம்
ADDED : செப் 10, 2025 08:48 AM
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த கொக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மகன் விஸ்வநாதன், 30; கூலி தொழிலாளி. இவர் கடந்த 3ம் தேதி பகல் 12:00 மணிக்கு, பைக்கில் உளுந்துார்பேட்டை- சேந்தநாடு சாலை வழியாக சென்றார். அப்போது எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதில் விஸ்வநாதன் மற்றும் எதிரே பைக்கில் வந்த அரியலுார் மாவட்டம், மேலகடம்பூர் பகுதி சேர்ந்தவர்கள் ராஜகண்ணு மகன் கருப்புசாமி, 25; மற்றும் மணவாளன் மகன் மதிவாணன், 26; மூவரும் படுகாயமடைந்தனர். மூவரையும் திருநாவலுார் போலீசார் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விஸ்வநாதன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.