/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மூதாட்டியை கட்டிப்போட்டு 9 சவரன் செயின் பறிப்பு மூதாட்டியை கட்டிப்போட்டு 9 சவரன் செயின் பறிப்பு
மூதாட்டியை கட்டிப்போட்டு 9 சவரன் செயின் பறிப்பு
மூதாட்டியை கட்டிப்போட்டு 9 சவரன் செயின் பறிப்பு
மூதாட்டியை கட்டிப்போட்டு 9 சவரன் செயின் பறிப்பு
ADDED : மே 31, 2025 05:11 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு, தங்க செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த ஷேக் உஷேன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சையத் ரசூல், 87; இவரது மனைவி ரபிஜாபீ, 72; நேற்று மதியம் 12:30 மணிக்கு, சையத் ரசூல் தொழுகைக்கு சென்றார். அப்போது, ரபிஜாபீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது பைக்கில் வந்த இரு நபர்கள், அவரது வீட்டிற்குள் வேகமாக நுழைந்து ரபிஜாபீ வாயில் துணியை வைத்து மூடி அவரது கைகளை கட்டி போட்டு கழுத்தில் அணிந்திருந்த, 9 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பியோடினர்.
இதில் நிலைகுலைந்த மூதாட்டி அடுத்த சில நிமிடங்களில், கயிற்றை அவிழ்த்து வாயில் இருந்த துணியை எடுத்து கூச்சலிட்டுள்ளார்.
தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
டி.எஸ்.பி., அசோகன், இன்ஸ்பெக்டர் ஷாகுல்ஹமீது மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நர்களை போலீசார் தேடிவருகின்றனர்.