/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு மாதிரி பள்ளிகளில் இடங்களை அதிகரிக்க கோரிக்கை; 3 ஒன்றியங்களில் புதிதாக துவங்க வலியுறுத்தல் அரசு மாதிரி பள்ளிகளில் இடங்களை அதிகரிக்க கோரிக்கை; 3 ஒன்றியங்களில் புதிதாக துவங்க வலியுறுத்தல்
அரசு மாதிரி பள்ளிகளில் இடங்களை அதிகரிக்க கோரிக்கை; 3 ஒன்றியங்களில் புதிதாக துவங்க வலியுறுத்தல்
அரசு மாதிரி பள்ளிகளில் இடங்களை அதிகரிக்க கோரிக்கை; 3 ஒன்றியங்களில் புதிதாக துவங்க வலியுறுத்தல்
அரசு மாதிரி பள்ளிகளில் இடங்களை அதிகரிக்க கோரிக்கை; 3 ஒன்றியங்களில் புதிதாக துவங்க வலியுறுத்தல்
ADDED : மே 31, 2025 12:55 AM

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் செயல்படும் அரசு மாதிரி பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த, 2010-2011ம் கல்வியாண்டில் அரசு மாதிரி பள்ளிகள் துவங்கப்பட்டன.
தொடர்ந்து அந்த பள்ளிகளில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
அரசு நடத்தும் ஆங்கில வழிக்கல்வி பள்ளி என்பதால், இதில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பள்ளியில், 6ம் வகுப்பு சேர விரும்புபவர்கள் கட்டாயம் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வில், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் இடம்பெறுகின்றன.
இந்த நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், மொத்தம் 80 மாணவர்கள் மட்டுமே, தேர்வு செய்யப்படுவர்.
இந்த பள்ளிகளுக்கு கிராமப்புறங்களில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஏழை, எளிய மக்கள், தங்கள் பிள்ளைகளை, மாதிரி பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என பெரிதும் விரும்புகின்றனர்.
இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்று சாதனை புரிந்து வருகின்றனர்.
இதனால் அங்கு மாணவர்களை சேர்ப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ஒரு வகுப்பில் 80 பேரை தான் சேர்க்க முடியும் என்ற நடைமுறையை மாற்றி, மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, சங்கராபுரம் ஒன்றியத்திற்கான மாதிரி பள்ளி மூலக்காடு கிராமத்தில் உள்ளது. அதேபோல், கள்ளக்குறிச்சி ஒன்றியம் - பெரியசிறுவத்துார்; ரிஷிவந்தியம் ஒன்றியம் - சித்தால்; தியாகதுருகம் ஒன்றியம் - விருகாவூர்; திருக்கோவிலுார் ஒன்றியம் - ஜி.அரியலுார்; உளுந்துார்பேட்டை ஒன்றியம் - ஏ.குமாரமங்கலம் ஆகிய 6 ஒன்றியங்களில் மட்டுமே மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஆனால், சின்னசேலம், கல்வராயன்மலை, திருநாவலுார் ஆகிய 3 ஒன்றியங்களில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
அதனால் அடுத்த கல்வியாண்டிற்குள் மீதமுள்ள, 3 ஒன்றியங்களிலும் அரசு மாதிரி பள்ளிகள
துவங்கிட முன்வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.