/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சிக்கு புதிய பஸ் ஸ்டாண்டு அறிவிப்பு நகர தி.மு.க.,வினர் கொண்டாட்டம் கள்ளக்குறிச்சிக்கு புதிய பஸ் ஸ்டாண்டு அறிவிப்பு நகர தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
கள்ளக்குறிச்சிக்கு புதிய பஸ் ஸ்டாண்டு அறிவிப்பு நகர தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
கள்ளக்குறிச்சிக்கு புதிய பஸ் ஸ்டாண்டு அறிவிப்பு நகர தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
கள்ளக்குறிச்சிக்கு புதிய பஸ் ஸ்டாண்டு அறிவிப்பு நகர தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
ADDED : மார் 25, 2025 09:40 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிக்கு புதிய பஸ் ஸ்டாண்டு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நகர தி.மு.க.,வினர் நான்கு முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பஸ் நிலையத்தை வெளிப்பகுதியில் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கோரிக்கையை ஏற்று, மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு பரிந்துரைப்படி, அமைச்சர்நேரு கள்ளக்குறிச்சிக்கு புதியபஸ் ஸ்டாண்டு அமைக்க நேற்று உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி தி.மு.க., நகர செயலாளரும், நகர்மன்ற சேர்மனுமான சுப்ராயலு தலைமையில் நான்கு முனை சந்திப்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
நகர்மன்ற துணை சேர்மன் ஷமீம்பானு அப்துல்ரசாக், நகர அவைத் தலைவர் அப்துல்கலீல், நகர துணை செயலாளர்கள் அப்துல்ரசாக், அபுபக்கர், நீதி அன்பு, விமலா மனோஜ், உமா வெங்கடேசன், நகர்மன்ற கவுன்சிலர்கள் ரமேஷ், பாத்திமா அபுபக்கர், செல்வம், தேவராஜ், கேசவன், ஞானவேல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.