/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு
நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு
நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு
நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு
ADDED : ஜூன் 02, 2025 12:18 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் மும்பையில் இருந்து நபார்டு வங்கியின் துணை மேலாண் இயக்குனர்கள் அஜய் கே சூத் மற்றும் ராவத் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட நபார்டு வங்கியின் வளர்ச்சி அலுவலர் செந்தில்வேல் வங்கியின் பணிகள் குறித்து பேசினார்.
முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஜெய்சங்கர், இந்தியன் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் முரளிதரன் வாழ்த்தி பேசினர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பல்வேறு விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தினர், தொண்டு நிறுவனத்தின் தலைவர்கள், வங்கி அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.