Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்

பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்

பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்

பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்

ADDED : மே 27, 2025 12:09 AM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மழை பாதிப்புகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை எண் 04141-228801 என்ற எண்ணிலும், 1077 என்ற எண்ணிலும் தெரிவிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதிக பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்கள் மற்றும் குறைவான பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து தற்காலிக நிவாரண மையங்கள் அனைத்து வசதிகளுடன் தயராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மழை நீர் தேங்கக் கூடிய பகுதிகளை கண்டறிந்து தடையின்றி செல்ல உரிய வழிவகை ஏற்படுத்த வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் உதவி ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us