/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் 41 பேருக்கு தேசிய அடையாள அட்டை மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் 41 பேருக்கு தேசிய அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் 41 பேருக்கு தேசிய அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் 41 பேருக்கு தேசிய அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் 41 பேருக்கு தேசிய அடையாள அட்டை
ADDED : செப் 14, 2025 11:23 PM

கள்ளக்குறிச்சி:திருநாவலுாரில் நடந்த மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் 41 பேருக்கு தேசிய அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.
திருநாவலுார் செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லுாரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற கலெக்டர் பிரசாந்த் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.
அரசு எலும்பு முறிவு டாக்டர் பரணிதரன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, மனநல டாக்டர் சரஸ்வதி, கண் டாக்டர் தேமாங்கனி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் 164 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த, 41 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 12 மாற்றுத்திறனாளிகள் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். 52 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வேண்டி பதிவேற்றம் செய்யப்பட்டது. 5 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.