/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க துவக்க விழா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க துவக்க விழா
நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க துவக்க விழா
நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க துவக்க விழா
நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க துவக்க விழா
ADDED : செப் 14, 2025 11:23 PM

திருக்கோவிலுார்: அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க திருக்கோவிலுார் கிளை துவக்க விழா நடந்தது.
தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, தொழிலதிபர் முரளி தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் விநாயகமூர்த்தி, வட தமிழ்நாடு ஏ.பி.ஜி.பி., இணைச் செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி வரவேற்றார்.
வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன், அரசு வழக்கறிஞர்கள் தேவசந்திரன், சங்கரன், தொழிலதிபர் பாலாஜி, ஏ.பி.ஜி.பி., வட தமிழ்நாடு செயலாளர் கிருஷ்ணாராம் முன்னிலை வகித்தனர்.
ஏ.பி.ஜி.பி., வட தமிழகத்தின் அபியாஸ் மண்டல் பொறுப்பாளர் பசுபதி இயக்கத்தின் நோக்கம் குறித்தும், தென் பாரத அமைப்பு செயலாளர் சுந்தர் அமைப்பின் அவசியம் குறித்தும் பேசினர்.
திருக்கோவிலுாரில் இருந்து சென்னைக்கு நேரடி பயணிகள் ரயில் சேவை துவக்க வேண்டும், ராமேஸ்வரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் திருக்கோவிலுார் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும், திருக்கோவிலுார் அரசு மருத்துவமனை கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பு பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.