/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சங்கராபுரத்தில் கன மழை மணி நதியில் வெள்ளம்சங்கராபுரத்தில் கன மழை மணி நதியில் வெள்ளம்
சங்கராபுரத்தில் கன மழை மணி நதியில் வெள்ளம்
சங்கராபுரத்தில் கன மழை மணி நதியில் வெள்ளம்
சங்கராபுரத்தில் கன மழை மணி நதியில் வெள்ளம்
ADDED : ஜூன் 07, 2024 06:24 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் நேற்று முன் தினம் இரவு விடிய, விடிய கன மழை பெய்தது.
இதன் காரணமாக மணி நதியில் நேற்று காலை வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.சங்கராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சங்கராபுரம் பகுதியில் விட்டு, விட்டு கன மழை பெய்து வருகிறது. கல்வராயன்மலையில் பெய்த கன மழையால் நேற்று மணி நதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பொது மக்கள் நீண்ட இடைவெளிக்கு பின் ஆற்றில் ஓடும் வெள்ளநீரை பார்க்க திரண்டனர். ஆற்றில் வெள்ளநீர் ஓடியதால் சங்கராபுரம் பகுதியில் உள்ள சங்கராபுரம், பூட்டை, தியாகராஜபுரம் ஆகிய கிராம ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கன மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.