/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பெரியார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்குபெரியார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு
பெரியார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு
பெரியார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு
பெரியார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு
ADDED : ஜூன் 07, 2024 06:25 AM
கச்சிராயபாளையம் : கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கல்வராயன் மலையில் பெரியார், கவியம், மேகம், சிறுகலுார் உட்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சிகளை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கல்வராயன் மலைக்கு வருகின்றனர். கோடை காலம் தொடங்கியதை ஒட்டி கல்வராயன் மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து குறைந்து முற்றிலும் வற்றி காணப்பட்டது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக கச்சிராயபாளையம் மற்றும் கல்வராயன் மலைப்பகுதியில் அவ்வப்போது பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கல்வராயன் மலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழை காரணமாக பெரியார் நீர்வீழ்ச்சியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து துவங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.