/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இளம்பெண்ணிடம் அத்துமீறியவர் கைது இளம்பெண்ணிடம் அத்துமீறியவர் கைது
ADDED : மே 14, 2025 11:45 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண்ணிடம் அத்துமீறியவரை, போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கண்டாச்சிமங்கலத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் தர்மலிங்கம்,39; ரியல் எஸ்டேட் புரோக்கர். இவர் கடந்த, 13ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்து செய்துவிடுவதாக மிரட்டினார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து தர்மலிங்கத்தை கைது செய்தனர்.