/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கோமுகி ஆற்றுப்பாலம் கட்டுமான பணிகள் ஓராண்டாக... இழுபறி; கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள் கோமுகி ஆற்றுப்பாலம் கட்டுமான பணிகள் ஓராண்டாக... இழுபறி; கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்
கோமுகி ஆற்றுப்பாலம் கட்டுமான பணிகள் ஓராண்டாக... இழுபறி; கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்
கோமுகி ஆற்றுப்பாலம் கட்டுமான பணிகள் ஓராண்டாக... இழுபறி; கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்
கோமுகி ஆற்றுப்பாலம் கட்டுமான பணிகள் ஓராண்டாக... இழுபறி; கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்
ADDED : ஜூன் 11, 2024 11:26 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வரும் நிலையில், கோமுகி ஆற்றுப்பாலம் பணிகள் படுமந்தமாக நடப்பதால், வாகன விபத்துகளில் உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
சேலம்-உளுந்துார்பேட்டை வரையிலான 136 கி.மீ., புறவழிச்சாலை, கடந்த 2012ம் ஆண்டு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த சாலையில் மாடூர், நத்தக்கரை, மேட்டுபட்டி ஆகிய 3 இடங்களில் டோல்கேட் அமைத்து, சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சேலம், கோயம்புத்துார், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை கொண்ட பெருநகரங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் இவ்வழித்தடத்தில் சென்று வருகின்றன.
இச்சாலையில் உளுந்துார்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்துார், வாழப்பாடி, உடையாப்பட்டி, அம்மாபேட்டை ஆகிய 9 இடங்களில் நகருக்கு வெளியே உள்ள புறவழிச்சாலைகள் மட்டும் இருவழிச்சாலையாக அமைக்கப்பட்டிருந்தது.
நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள், திடீரென அகலம் குறைந்த இருவழிச்சாலையில் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்லும் போதும், கவனக்குறைவு மற்றும் அதிவேகம் காரணமாக அடிக்கடி நடக்கும் விபத்துக்களால் உயிர் சேதம் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டியது. அதையடுத்து, இருவழிச்சாலையினை விரிவாக்கம் செய்து நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
பெரும்பாலான புறவழிச்சாலைகளில் பணிகள் துரித கதியில் நடந்து முடிவடைய உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்டம் பாலம் அமைப்பதற்கான பணிகள் மட்டும் மிகவும் மந்தகதியில் நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் கடந்த சில நாட்களில் வாகன விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்தாண்டு மே மாதத்தில் துவங்கி, செப்டம்பரில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட இந்த பணி ஓராண்டு கடந்தும் பாலத்திற்கான பணிகள் முழுமையாக துவங்காமலேயே இழுபறி நிலையில் இருந்து வருகிறது. பைபாஸ் நான்கு வழிச்சாலையில் விபத்து ஏற்படுவதை தடுத்திட துவங்கப்பட்ட இந்த திட்டம் கோமுகி ஆற்றில் பாலம் கட்டுமான பணிகள் மந்தகதியில் நடப்பதால் தீர்வு காணப்படாத நிலையில் உள்ளது.
இதனால் விபத்து ஏற்படுவது தவிர்க்க முடியாமல் போகிறது. எனவே இந்த பணிகளை துரிதப்படுத்தி பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.