/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் கைது கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் கைது
கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் கைது
கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் கைது
கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் கைது
ADDED : ஜூன் 11, 2024 11:24 PM
கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அருகே கிராவல் மண் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.
தியாகதுருகம் சப் இன்ஸ் பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று காலை 7 மணியளவில் மின்வாரிய அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த லாரி டிப்பரை மடக்கி விசாரித்தனர். அதில் மூன்று யூனிட் கிராவல் மண் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து கிராவல் மண் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் லாரி உரிமையாளர் இருதயபுரத்தை சேர்ந்த சூசை, புதுமாடம் பட்டை சேர்ந்த லாரி டிரைவர் ராமு மகன் முத்துக்குமார், 27; ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.