/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முருகன் கோவிலில் கந்த சஷ்டி கவசம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி கவசம்
முருகன் கோவிலில் கந்த சஷ்டி கவசம்
முருகன் கோவிலில் கந்த சஷ்டி கவசம்
முருகன் கோவிலில் கந்த சஷ்டி கவசம்
ADDED : ஜூன் 30, 2025 03:26 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து மக்கள் இன்று முருகன் கோவில்களுக்கு சென்று கந்த சஷ்டி கவசம் பாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல் தெரிவித்துள்ளதாவது :
கடந்த 22 ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அதில் ஆன்மீக பெரியவர்கள், ரிஷிகள் உள்ளிட்ட, 7 லட்சத்துக்கும் அதிகமான ஹிந்து மக்கள் அனைவரும் ஒன்று கூடி கந்த சஷ்டி கவசம் பாடினர்.
அந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தின்படி, சஷ்டி திதி தினமான இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்துக்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தினருடன் முருகன் கோவிலுக்கு சென்று கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும்.
அதேபோல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் நாம் அனைவரும் தங்களின் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.