Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி

கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி

கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி

கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி

ADDED : ஜூன் 30, 2025 03:26 AM


Google News
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே கிணற்றில் தவறி விழுந்து, 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கீழ் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி மீனா. இருவரும் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், உளுந்துார்பேட்டை அடுத்த மடப்பட்டு கிராமத்தில் உள்ள சகோதரர் குமார் வீட்டிற்கு, மீனா தனது பிள்ளைகள் அம்சவல்லி, 17; சங்கீதா, 14; மெதிமா, 3; ஆகியோரை அழைத்து கொண்டு வந்தார்.

தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து, கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல, கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றார். அப்போது குமாரின் வீட்டு அருகே உள்ள கிணற்றில் அம்சவல்லி, சங்கீதா் இறங்கி குளித்தனர். தொடர்ந்து குமாரின் பிள்கைளும் கிணற்றில் இறங்கி குளிக்க, சிறுமி மெதிமா மட்டும், கரையில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக திடீரென அவர் கிணற்றில் தவறி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த சிறுமிகள்,

சத்தம் போட்டனர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, கிணற்றில் குதித்து, மெதிமாவை தேடிப்பார்த்து, கண்டு பிடிக்க முடியவில்லை.

தகவலறிந்த திருநாவலுார் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பல மணி தேடுதலுக்கு பிறகு, சிறுமியின் உடலை மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us