Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி சாதனை: ஓராண்டில் ரூ.65.12 கோடிக்கு வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி சாதனை: ஓராண்டில் ரூ.65.12 கோடிக்கு வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி சாதனை: ஓராண்டில் ரூ.65.12 கோடிக்கு வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி சாதனை: ஓராண்டில் ரூ.65.12 கோடிக்கு வர்த்தகம்

ADDED : ஜன 10, 2024 11:29 PM


Google News
கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் கடந்தாண்டில் (2023 ஜன.1 முதல் டிச.31 வரை) 12,589 டன் விவசாய விளைபொருட்கள் விற்பனை மொத்தம் ரூ.65.12 கோடியை எட்டியது.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் எள், உளுந்து மற்றும் மக்காசோளம் அதிகளவில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மார்க்கெட் கமிட்டிக்கு நாள்தோறும் விவசாய விளைபொருட்கள் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, சின்னசேலம், தியாகதுருகம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் மார்க்கெட் கமிட்டிகள் இயங்கி வருகின்றன.

ஆனால் எள், உளுந்து, மக்காச்சோளம் போன்ற உயர்விளைச்சல் பயிர்கள் கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை ஆகிய 2 மார்க்கெட் கமிட்டிகளில் மட்டுமே அதிகளவு வரத்து இருந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து பயிர்களின் தரத்திற்கேற்றவாறு விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு மொத்தமாக 31,817 விவசாயிகள், 12,589 மெட்ரிக் டன் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இது ரூ.65.12 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதில் 5,556 விவசாயிகள் கொண்டு வந்த 7,086 டன் மக்காச்சோளம் 15.03 கோடிக்கு விற்பனையானது. 18,095 விவசாயிகள் கொண்டு வந்த 2,510 டன் எள் 35.01 கோடி, 5,562 விவசாயிகள் கொண்டு வந்த 1,288 டன் உளுந்து, 90.2 லட்சத்திற்கு விற்பனையானது.

1,262 விவசாயிகள் கொண்டு வந்த 260 டன் மணிலா, 2.5 கோடிக்கும் 703 விவசாயிகள் கொண்டு வந்த 148.4 டன் கம்பு, 78 லட்சத்திற்கும் . 120 விவசாயிகள் கொண்டு வந்த 4 டன் தட்டைப்பயிறு, 2.16 லட்சத்திற்கும், 103 விவசாயிகள் கொண்டு வந்த 3.8 டன் பச்சைப்பயிறு, 2.65 லட்சத்திற்கு விற்பனையானது.

மேலும் 79 விவசாயிகள் கொண்டு வந்த 12.6 டன் கேழ்வரகு, 3.43 லட்சத்திற்கும் , 61 விவசாயிகள் கொண்டு வந்த 35 டன் வரகு, 14.5 லட்சத்திற்கும் , 176 விவசாயிகள் கொண்டு வந்த 32 டன் இதர விளைபொருட்கள், 14.2 லட்சத்திற்கு என மொத்தமாக 31,817 விவசாயிகள் கொண்டுவந்த, 12,589 மெட்ரிக் டன் விளை பொருட்கள் ரூ.65.12 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என கமிட்டி கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் கடந்த 2023 ஜன., முதல் டிச., வரையிலான காலத்தில் 2,215 விவசாயிகள் கொண்டு வந்த 18,150 மூட்டை விளைபொருட்கள் ரூ.4.78 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது என கமிட்டி கண்காணிப்பாளர் சந்தியா தெரிவித்துள்ளார்.

இதேபோல் தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் கடந்த 2023 ஜன., முதல் டிச., வரையிலான காலத்தில் 10,934 விவசாயிகள் கொண்டு வந்த 4,540 மெ.டன் விளைபொருட்கள் 15 கோடியே 93 லட்சத்து 91 ஆயிரத்து 216க்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us